TamilsGuide

விஜய், சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்த மீண்டும் வெளியாகிறது ப்ரண்ட்ஸ்

2001-ம் ஆண்டு நடிகர்கள் விஜய்- சூர்யா இணைந்து நடித்து வெளியான படம் 'ஃப்ரண்ட்ஸ்'. இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, ஸ்ரீமன், விஜயலட்சுமி, மதன் பாப், சரிதா உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர்.

மலையாள திரைப்படமான 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை தழுவியே இப்படம் வெளிவந்தது. சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும், கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் மீண்டும் 4-கே டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அடுத்த மாதம் 21-ந்தேதி மீண்டும் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில், 'ப்ரண்ட்ஸ்' படமும் வெளியாக உள்ளதாக ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். 

Leave a comment

Comment