TamilsGuide

உடன் அமுலாகும் வகையில் ஹரின் பெர்னாண்டோவுக்கு முக்கிய பதவி

உடன் அமுலாகும் வகையில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை ஐக்கிய தேசிய கட்சி அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளராக நியமித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட பதவியின் பொறுப்பு, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவற்றை ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவதாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்யும் 1,000 கூட்டங்களுக்கும் ஹரின் பெர்னாண்டோவே பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment

Comment