TamilsGuide

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தொடர்ந்தும் பாதிப்பு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாளை (22) நண்பகல் 12.00 மணி வரை வழமைக்கு திரும்பாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்றும் இரவு நேர தபால் ரயில் சேவைகள் இயங்காது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து இயங்கும் ரயில்கள் ரம்புக்கனை வரையும் பதுளையிலிருந்து கொழும்புக்கு செல்லும் ரயில்கள் பேராதனை வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
 

Leave a comment

Comment