எம். ஜி. ஆர் ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் பெயரில் இருந்த திட்டங்கள் கட்டடங்கள் தெருக்கள் என்று அனைத்தில் இருந்தும் அவர் பெயரை எடுத்து விட்டார்.
இதற்கெல்லாம் கலைஞர் கோப்படுவார் என்று எண்ணிக் கொண்டு பத்திரிகை நிருபர் ஒருவர் அவரிடம் உங்கள் பெயரை எம். ஜி. ஆர் நீக்கிக் கொண்டு வருகின்றாரே என்ன காரணம் என்று கேட்டார்.
அதற்குக் கலைஞர் தேர்தலில் வென்றதும் பல பெரியவர்களிடம் ஆசி பெற்றார் முதலமைச்சர். அவர்கள் எல்லோரும் உன் ஆட்சியிலே நல்ல பெயரை எடப்பா என்று வாழ்த்துக் கூறினார்கள்.
அதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார் என்று சிரித்துக்கொண்டே கூறினார் .
கலைஞர் நல்லவரா இல்லையா என்பதல்லப் பிரச்சனை. நிருபர் கேட்ட உடனே தனது கோபத்தைக் காட்ட ஏதாவது சொல்லிச் சராசரி மனிதனாக இருந்துவிடாமல் அனைவரும் சிரிக்கும் பதிலை கணப்போதில் சொல்லும் அரசியல் திறமை கலைஞருக்கு இருந்தது.
இரா.சம்பந்தன்


