நான்காவது ஆண்டாகTET /HDயின் இசைப்பயணம் - 2025-Singer Junior (Season-4) Grand Finale 2
கனடாவின் முன்னணித் தமிழ் தொலைக்காட்சியான TET/HD ஊடக மையத்தின் SINGER JUNIOR பாடல் போட்டி நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக பலரது ஆதரவோடு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இளையவர்களிடத்தில் வளர்ந்து வரும் இசை ஆர்வம் காரணமாக பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இளம் தலைமுறையினரிடையே ஒரு பாடல் போட்டி நிகழ்ச்சியைத் தயாரித்து, அதற்கான தளத்தை அமைத்துக் கொடுத்ததில் TET /HD ஊடகமையம் முதன்மை பெறுகிறது.
இதை ஒரு கழியாட்ட நிகழ்வாக மட்டும் கருதிவிட முடியாது. நம் கலைகலாச்சாரம் பண்பாடு என்பவற்றை பிரதிபலிக்கும் ஒரு நிகழ்வாகவும், எங்கள் எதிர்காலச்சந்ததி, இயல்இசை மொழி என்பவற்றில் வல்லவர்களாகத் திகழும் நிலையை உருவாக்கும் ஒரு கலாச்சார நிகழ்வாகவுமே கருதவேண்டும்.
கடந்த ஆறுமாதங்களாக, இந்த நிகழ்வின் வெற்றிக்கு பலரது கரங்கள் இணைந்திருந்தன.பாடல்,இசைஎன்பவற்றில் ஆர்வமுள்ள பிள்ளைகள்,அவர்களது திறமைகளை இனங்கண்டு கலையகத்துக்கு அழைத்து வந்து ஊக்கம் கொடுத்த பெற்றோர், சிறப்பாகப் பணிபுரிந்த நடுவர்கள், இசைக்கலைஞர்கள், ஒலிபரப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள்,விளம்பரஅனுசரணையாளர்கள், போன்றவர்களை யெல்லாம் ஒன்றிணைத்து களம்அமைத்துக்கொடுத்ததுTET /HD தெலைக்காட்சி


