TamilsGuide

விஜய் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார் - அண்ணனுக்காக களமிறங்கிய திருப்பாச்சி பட தங்கை

கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக திருப்பாச்சி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த மல்லிகா பேசியுள்ளார்.

விஜய் குறித்து மல்லிகா வெளியிட்டுள்ள வீடியோவில், "இன்ஸ்டாகிராமில் விஜய் சார் பத்திதான் வீடியோ வருகிறது. அவருக்கு நிறைய பேர் சப்போர்ட் பண்ணி பேசுகிறார்கள். நானும் அவரைப் பத்தி பேசணும்'னு நினைக்கிறேன். படப்பிடிப்பில் எல்லாம் அவர் ரொம்ப அமைதியா இருப்பாரு. ஆனால் கட்சி தொடங்கி மக்கள் கிட்ட பேசும்போது அவர் கிட்ட நிறைய மாற்றம் தெரியுது. அதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா உள்ளது.

அவர் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார் மக்கள் முன்னாடி அல்ல. நல்லது செய்ய வந்தால் தப்பா சில விஷயம் நடக்கும் ஆனா, கடைசியில அவர் தான் ஜெயிப்பார். கூட்டத்துல சதி பண்ண சிலர் வருவாங்க கொஞ்சம் பார்த்து உஷாரா இருங்க அண்ணா" என்று தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment