இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த விளம்பரம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தின் டிரெய்லர் போல உள்ளது. பல பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை விட இந்த விளம்பரத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த விளம்பரம் அனைவரின் கவனத்தியும் ஈர்த்துள்ளது.
இந்த விளம்பரத்தில் சிங் நிறுவனத்தின் ஏஜெண்டாக ரன்வீர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
ரன்வீர் சிங் இதற்கு முன்பும் சிங் நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்திருந்தார். ரோஹித் ஷெட்டி இயக்கிய இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் விளம்பரத்தில் தமன்னாவுடன் இணைந்து ரன்வீர் சிங் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


