இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்படுவதாகவும் இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று பேர் மரணிப்பதாகவும் தினசரி 15 நோயாளிகள் இனம் காணப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மார்பகப் புற்று நோய் இள வயதிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அதனை குணப்படுத்த முடியும் எனவும் பெண்கள் தினசரி சுய பரிசோதனை மூலம் இந்த நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும் இன்றைய விழிப்புணர்வு நிகழ்வின் போது அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரா முரளீஸ்வரன் இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரா முரளீஸ்வரனும், சிறப்பு அதிதியாக மண் முனை வடக்கு பிரதேச செயலாளர் வி சிவப்பிரியா மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, மார்பகப் புற்றுநோயின் பாதிப்புகள் குறித்து விசேட வைத்திய நிபுணர் எஸ் ஸ்ரீதரன் அவர்களால் இங்கு விசேட விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


