TamilsGuide

சாவகச்சேரிப் பகுதியில்  ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட பெண் தவறிவிழுந்து மரணம்

ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட பெண் தவறிவிழுந்து மரணம்
யாழ்ப்பாணம், ஒக்.17
சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் நேற்று கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி சங்கத்தானையை அடைந்ததும் மேற் படி பெண் புகையிரதத்தில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் இருந்த பெட்டி யின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு பெட்டி ஊடாக சென்று இறங்க முற்பட்ட வேளையில் புகையிரதமும் நகர்ந்ததால் பெண் கீழே விழுந்து படுகாயமடைந்திருந்தார்.
படுகாயமடைந்த பெண்ணை சாவகச் சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச் சைக்காக அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் மகனிடம் சென்று மீண்டும் வீடு திரும் பிய போதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி கோவிற் குடியிருப்பைச் சேர்ந்த 53வயதான சு.சுபா சினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மேற்படி விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
—-----------------
இப்படியான அகால மரணங்களுக்கு நிச்சயம் அதிகாரிகள் தான் காரணம் என்று நினைக்கின்றேன்.
இதைப்பற்றி புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் சிலரிடம் விசாரித்தபோது பின்வரும் தகவல்கள் கிடைத்தன.
1.சங்கத்தானை போன்ற சில புகையிரத நிலையங்களின் மேடைகளின் நீளம் போதாது. அதன் நீளம் 180 மிட்டர் நீளம் மட்டுமே உள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகர் மேடையும் நீளம் போதாது என்ற தகவல் முன்பு வெளிவந்திருந்தது.
2. இந்தியாவால் வழங்கப்பட்ட S13 வகை நவீன பெட்டிகள் 20 மீட்டர் நீளமுடையவை. 13 பெட்டிகளின் நீளம் 260 மீட்டரை விட அதிகமாகும். 3-4 பட்டிகள் புகையிரத மேடைக்கு வெளியில் தரிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.
3. இறுதி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் முன் உள்ள பெட்டிகளுக்கு சென்று இறங்குமாறு அறிவித்தல் கொடுக்கப்பட்டதாகவும் இவர்கள் அதை செவிமடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. 🤬
இதற்கான தீர்வுகள் என்ன?
1. தற்போது புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் இல்லாது இயங்கிவரும் சங்கத்தானை போன்ற புகையிரத நிலையங்களுக்கு உடனடியாக உத்தியோகத்தர்கள் (அதிபர்கள்/ station master) நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் சைகை காட்டிய பின்பே guard பச்சைக்கொடி காட்டி புகையிரதம் புறப்படுவது வழக்கம்.
2. இப்படியான பாதுகாப்பற்ற நிலையங்களில் புகையிரதம் நிறுத்தப்படக் கூடாது.
3. உடனடியாக இப்படியான மேடைகளின் நீளம் புகையிரதங்களின் நீளத்திற்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும்.
4. அதிகாரிகளின் அல்லது புகையிரத திணைக்களத்தின் அசமந்த போக்கினால் உயிரிழந்தவர் சார்பில் நட்ட ஈடு கேட்டு யாராவது வழக்கு தொடுக்க வேண்டும். அதன்பின்னாவது இவர்கள் திருந்தக்கூடும். செய்தி (ஈழநாடு-17/10/2025)
 

Leave a comment

Comment