TamilsGuide

சுவிஸ் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவர் ஸ்ரீ வோல்ற் மற்றும் சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் பொய்யிலற் ஆகியோரை இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்றையதினம் கொழும்பு சுவிஸ் தூதரலாயத்தில் நடைபெற்றது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை, சமகால அரசியல் நிலைமைகள், மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் , பொறுப்புக்கூறல் நடவடிக்கையின் தொடர் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.  
 

Leave a comment

Comment