வென்னப்புவ புதிய வீதியின் கொரககாஸ் சந்தியில் இன்று (17) காலை 6.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண்ணும் வேனின் சாரதியும் காயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் கொஸ்வத்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் புஷ்பகுமார ஏகநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான வேனை வென்னப்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


