TamilsGuide

மஹிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் இன்று (17) நெவில் வன்னியாராச்சியின் பிணை மனுவை நிராகரித்து, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. 

28 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் வழக்கில் நெவில் வன்னியாராச்சி கடந்த 02 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.
 

Leave a comment

Comment