TamilsGuide

ஆரோக்கியமான முதுமைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய இந்தியா

முதியோருக்கான விரிவான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட அமைப்பின் அடிப்படையில், வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமையை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 13ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய உலக சுகாதார அமைப்பின் பிராந்தியக் குழுவின் 78வது அமர்வில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா சிங் படேல் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த அமர்வில் “வலுவூட்டப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமை” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட உரையாடல்கள் இடம்பெற்றன.

குறித்த அமர்வில் முதியோருக்கான விரிவான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட அமைப்பின் அடிப்படையில், வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமையை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தியா இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியது.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 153 மில்லியன் குடிமக்களைக் கொண்ட இந்தியா, ஒரு பெரிய மக்கள்தொகை மாற்றத்தைக் காண்கிறது என்பதை அனுப்ரியா சிங் படேல் எடுத்துரைத்தார்.

மேலும், முதியவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப சமமான, அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்ய, இந்திய அரசு பல
முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதேவேளை, அறிவுப் பகிர்வு மற்றும் புதுமைக்கான பிராந்திய தளத்தை நிறுவுதல், நாடுகள் முழுவதும் முதியோர் மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்களில் முதலீடு செய்தல், மற்றும் முதியவர்களுக்கு சுயாதீனமான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை ஆதரிக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் சுகாதார தீர்வுகளை ஊக்குவித்தல் போன்ற மூன்று முக்கிய முன்மொழிவுகளை குறித்த அமர்வில் இந்திய சார்பில் பங்கேற்ற சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா சிங் படேல் முனைந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆரோக்கியமான முதுமைப் பத்தாண்டு (2021–2030) உடன் இந்தியாவின் இணக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்திய வெளியுறவு அமைச்சர், முதுமையை உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முதுமை உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் கவனிப்புடன் வாழ்வதை உறுதி செய்வதில் இந்தியா இதன்போது உறுதிபூண்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் இணைந்து நடத்திய டிஜிட்டல் சுகாதாரம் குறித்த ஒரு பக்க நிகழ்வில், இலங்கையின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் இணைந்து அமைச்சர் தனது கருத்துக்களையும் வழங்கினார். 
 

Leave a comment

Comment