TamilsGuide

கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 ஒக்டோபர் 17 அன்று நண்பகல் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிடப்பட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய வேண்டும் என்று விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.  

இச் செயல்முறை, பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும், விமான நிலையத்தினுள் பயணிகள் போக்கரவத்தைச் சீராகச் செய்வதற்குமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் முக்கிய சர்வதேச நுழைவாயிலில் கூட்ட நெரிசலை நிர்வகிக்கவும், நெரிசலைக் குறைக்கவும், ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும் இந்த முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment