TamilsGuide

டீசல் படம் வெற்றி பெறவேண்டி அண்ணாமலையார் கோவிலில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி சாமி தரிசனம்

பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்`டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

டீசல் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில், டீசல் படம் வெற்றி பெறவேண்டி நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி உள்ளிட்ட படக் குழுவினர் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
 

Leave a comment

Comment