TamilsGuide

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது

தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மூவர் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டனர்.

தமன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தமன, திவியகல பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 

இதன்போது, தனியார் நிலத்தில் தொல்பொருட்களை தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 55, 42 மற்றும் 65 வயதுகளையுடைய திவியகல மற்றும் மொரகஹபள்ளம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று சந்தேக நபர்களிடமும் பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment