TamilsGuide

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. 

வருகிற தீபாவளி அன்று தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்பு திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு திரைப்படமாக விஜய் சேதுபதியின் Ace படம் ஒளிபரப்பாகிறது.


விஜய் டிவி

தனுஷின் குபேரா காலை 11 மணிக்கு, விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி மாலை 6 மணிக்கு மற்றும் பறந்து போ மதியம் 3.30 மணிக்கு சிறப்பு தீபாவளி திரைப்படங்களாக ஒளிபரப்பாகிறது.

சன் டிவி

கண்ணப்பா தீபாவளி ஒரு நாள் முன்பே (அக்டோபர் 19ஆம் தேதி) சன் டிவியில் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


தீபாவளி அன்று காலை 11 மணிக்கு ராம்போ மற்றும் மாலை 6 மணிக்கு ரஜினியின் கூலி ஆகிய படங்கள் ஒளிபரப்பாகிறது. 

கலைஞர் டிவி

தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற சுழல் வெப் தொடரை, கலைஞர் டிவியில் தீபாவளி சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பு செய்கின்றனர். 

Leave a comment

Comment