மனிதர்களை சந்தர்ப்பச் சூழ்நிலை என்னவெல்லாம் செய்யும் என்பதை எடுத்துச் சொல்வது 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி.'
சிங்கப்பூரில் வசிக்கிற முரளி சொந்த ஊருக்கு வருகிறான். தனது காதலியை தேடிப் போகிறான். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்ட விவரம் தெரிந்து அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியிலிருந்தும் அவனை மீட்க அவனது நண்பன் தனது தங்கையை திருமணம் செய்து வைக்கிறான். நாட்கள் நல்லபடியாக நகர முரளியின் மனைவி தாய்மையடைகிறாள்.
அந்த சந்தர்ப்பத்தில் தனது முன்னாள் காதலியைப் பற்றி சில விஷயங்கள் முரளியின் கவனத்துக்கு வருகிறது. அவளுக்கு திருமணமான விவரம் தெரிந்தபோது அதிர்ச்சியடைந்ததை விட பல மடங்கு அதிர்ச்சியடைகிறான். அது மனநிலை அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பது கதை.
ஆர்.ஆர் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஆதிக் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காயத்ரி ரெமா, அனுகிருஷ்ணா கதாநாயகிகளாக நடிக்க தம்பி சிவன், வர்ஷிதா,விஜய் டிவி சரத்,மனோகர் பெருமாத்தா ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். டைசன் ராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கே.ராஜன், ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஜாக்குவார் தங்கம், என்.விஜயமுரளி, விவேகபாரதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளி வருகிறது.


