TamilsGuide

மகுடம் படத்தின் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு - விஷால் எடுத்த அதிரடி முடிவு

விஷாலின் 35ஆவது படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கி வந்தார். இப்படத்திற்கு மகுடம் என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும்.

விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்க வருகின்றனர்.

இந்நிலையில், ரவி அரசு உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகுடம் படத்திலிருந்து ரவி அரசு விலகிய நிலையில், இப்படத்தை நடிகர் விஷால் இயக்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 
 

Leave a comment

Comment