TamilsGuide

இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஹீரோ படம்.. லோகா ஓடிடி ரிலீஸ் அப்டேட்

மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான 'கள்ளியங்காடு நீலி' ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டு டொமினிக் அருண் ஃபேன்டசி-ஆக்ஷன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. இதுவே இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது.

இந்த படத்தின் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்லேன், சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 
 

Leave a comment

Comment