TamilsGuide

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி

வங்கதேசம் தலைநகர் டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷியல்பாரி பகுதியில் உள்ள ஒரு ரசாயனக் கிடங்கு மற்றும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அருகிலுள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து நச்சுப் புகையை சுவாசித்ததால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.
 

Leave a comment

Comment