TamilsGuide

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் டிரம்ப் பேசும்போது கோஷம் எழுப்பப்பட்டதால் பரபரப்பு..

இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார்.

அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார். அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் உறுப்பினர் உலகிற்கு அதிக டிரம்ப்கள் தேவை என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று புகழாரம் சூட்டினர்.

அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இரண்டு உறுப்பினர்கள் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அவை பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர். பின்னர் டிரம்ப் தொடர்ந்து உரையாற்றினார்.

ஐமென் ஓடே மற்றும் ஓஃபர் காசிஃப் அகிய இரண்டு உறுப்பினர்கள்தான் கோஷம் எழுப்பினர். அதில் ஒருவர் இனப்படுகொலை என எழுதப்பட்டிருந்த பதாகையை தூக்கிபிடித்திருந்தார்.
 

Leave a comment

Comment