TamilsGuide

விமலின் மகாசேனா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் அறிமுகமாகி 'களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரது நடிப்பில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்து வரும் 'மகாசேனா' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கப்பட்டது. கூடலூர் அருகே உள்ள சந்தன மலைப்பகுதியில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்நிலையில், விமல் நடிக்கும் 'மகாசேனா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment