கடலோர மார்க்கமூடான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேருவளை, மாகல்கந்த பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் விளைவாக ரயில் ஒன்றின் முன் பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் பாதிக்கப்பட்ட ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.


