இந்த ஆண்டு உலக பரா தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதீப் சோமசிறி, T47 பிரிவில் 1,500 மீட்டர் ஓட்டப்போட்டியில் 3 நிமிடம் 53 செக்கன் 7 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்று ஆசிய சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் அணித் தலைவர் நுவான் இந்திக கமகே, T44 பிரிவில் நீளம் தாண்டுதலில் 6.46 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.
உலக பரா தடகள செம்பியன்ஷிப் போட்டி இந்தியாவின் புது டெல்லியில் இடம்பெற்றதுடன், இதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த உலக தரவரிசையில் முன்னிலையில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இதேவேளை, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 05 விளையாட்டு வீரர்கள் 09 போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.


