TamilsGuide

சிம்பு நடிக்கும் அரசன்- ப்ரோமோ வெளியாகும் திரையரங்குகளின் பட்டியல் வெளியீடு

நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.

இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

பின்னர், 'எஸ்டிஆர் 49' படத்தின் தலைப்பு 'அரசன்' என்று கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், 'அரசன்' படத்தின் ப்ரோமோ வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்தது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம்17ம் தேதி காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது.

முன்னதாக, 16ம் தேதி மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படும் எனவும் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

மேலும், 'அரசன்' படத்தின் ப்ரோமோ அக்.16ம் தேதி பிரத்யேகமாக திரையிடப்படவுள்ள தியேட்டர்களின் பட்டியலை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார். டிக்கெட் கட்டணமாக ரூ.15 செலுத்தி ப்ரோமோவைக் காணலாம் என கூறப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment