TamilsGuide

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்

இலங்கையில் இடம்பெறும் 8வது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சர்வதேச சுகாதார உச்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக அவர் இன்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு நாளையதினம் (13) முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற உள்ளது.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்களும் இந்த மாநாட்டிற்காக இலங்கைக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் இன்று முற்பகல் 9.40 மணியளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 660 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதன்போது அவரை சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வரவேற்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment