TamilsGuide

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சம்மாந்துறை பொலிஸாரின் விஷேட அறிவித்தல்

வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுடன் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி திட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (12) மாலை 3 மணிக்கு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்து வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களும் அவசியம் இக்கலந்துரையாடலில் பங்கேற்பதுடன் வருகைதரும்போது தங்களுடைய முச்சக்கர வண்டிகளுடன் வருகை தருமாறும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரதிப் குமார அறிவித்துள்ளார்.

 

 

Leave a comment

Comment