TamilsGuide

ஆண்டனி வர்கீஸ் மிரட்டும் காட்டாளன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முகமது தயாரிக்கும் மாபெரும் ஆக்ஷன் திரில்லர் படமான "காட்டாளன்" படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

புதிய இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் "காட்டாளன்", மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது.

பான்-இந்தியா பிரம்மாண்டம் என்ற கான்செப்டில் உருவாகும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் தயாராகிறது.

படத்திற்கான இசையை "காந்தாரா", "மகாராஜா" போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்த B. அஜனீஷ் லோக்நாத் வழங்கியுள்ளார்.

இப்படத்தில், முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார்— இப்படியாக ஆண்டனியின் அதிரடி லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாக காட்சி தருகிறது.

ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான நிறைந்த தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கி விருந்தளிக்கிறது.

இதில், தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு, பாலிவுட் நடிகர் பார்த்த் திவாரி ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளத் திரையுலகிலிருந்து ஜகதீஷ், சித்திக், மற்றும் ஹனான் ஷா இணைந்துள்ளனர்.

Leave a comment

Comment