TamilsGuide

காதலனை விட்டு வரமறுத்த 3 பிள்ளைகளின் தாய் - கணவன் செய்த கொடூரம்

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் தனது மூன்று குழந்தைகளை கொலை செய்து பொலிஸில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், சாரதியாகவும் வேலை பார்த்து வந்தார்.

இவருடைய மனைவி நித்யா(35). இந்த தம்பதியினர் மணவாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தது.  இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.

இதில் மூத்த மகள் ஓவியா(12) 6-ம் வகுப்பு படித்து வந்தாள். 2-வது மகள் கீர்த்தி(8) 3-ம் வகுப்பு படித்து வந்தாள். 3-வதாக 5 வயதில் ஈஸ்வரன் என்ற மகன் இருந்தான்.

இந்த நிலையில், நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பாழாய்ப்போன இந்த கெட்ட சகவாசத்தால் நித்யா தனது அன்பான கணவரையும், குழந்தைகளையும் மறந்து கள்ளக்காதலனே கதி என்றானார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து, தனது கள்ளக்காதலனுடன் நித்யா சென்று விட்டார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை சந்தித்து மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்த  போதும்   நித்யா கள்ளக்காதலனை விட்டு கணவருடன் வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

மனைவி தன்னை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய வேதனை ஒரு புறம். 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்தவர்  நேற்று மாலை வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறி உள்ளார்.

குழந்தைகளும் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.  இந்நிலையில்    குழந்தைகள் என்றும் பாராது தனது 3 குழந்தைகளையும் கொலை செய்தார். 

பின்னர் வினோத்குமார், மதுக்கூர் பொலிஸச நிலையத்திற்கு சென்று தான் தனது 3 குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறி சரண் அடைந்2ததாக கூறப்படுகின்றது.

தாயின் தகாத உறவால் குழந்தைகள்  கொல்லப்பட்ட சம்பவம் பெரு அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

Leave a comment

Comment