TamilsGuide

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சுக்கு புதிய செயலாளர்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக மூத்த பேராசிரியர் கபில சி.கே. பெரேரா நியமிக்கப்பட்டார்.

மேலும் தொடர்புடைய நியமனம் கடிதம் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (10) அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா முன்னர் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment