TamilsGuide

இலங்கையில் பேருந்து கட்டணங்கள் டிஜிட்டல் மயமாகின்றன

எதிர்வரும் நவம்பர் 30 முதல் பயணச்சீட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் வங்கிகளின் வரவு மற்றும் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகள் பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

தனியார் பேருந்து உரிமையாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டண முறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த திட்டம், ஏற்கனவே பயணச்சீட்டு இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ள பேருந்துகளையும் உள்ளடக்கும்.

மேலும் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
 

Leave a comment

Comment