TamilsGuide

பப்புவா நியூ கினியாவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள கடற்கரை பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
 

Leave a comment

Comment