லத்தீன் அமெரிக்க நாடான ஈகுவடார் நாட்டில் கடந்த சில காலமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தொடங்கியுள்ளது.
இதனால் அந்நாட்டு அதிபர் டேனியல் நோபோவா இதுவரை வழங்கி வந்த டீசல் மானியத்தை ரத்து செய்துள்ளார். இதனால் டீசல் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளதால் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பாதுகாப்பு வளையத்தையும் மீற முயன்றனர். இதனால் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன், பலரை கைது செய்துள்ளனர்.
இந்த போராட்டம் குறித்து பேசியுள்ள அதிபர் டேனியல் நோபோவா, போராட்டக்காரர்களின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணியாது. போராட்டத்தில் வன்முறையை கையில் எடுப்பவர்கள் குற்றவாளியாக கருதப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.
அதை தொடர்ந்து பல இடங்களில் அதிபருக்கு எதிராக போராட்டம் வெடிக்கலாம் என்பதால் 10 மாகாணங்களில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


