TamilsGuide

புதிய மந்திரி சபை அறிவிப்பு வெளியான நிலையில் பிரான்ஸ் பிரதமர் திடீர் ராஜினாமா

பிரான்ஸ் நாட்டின் பிரதமராக செபஸ்டியன் லெகோர்னு கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான அவரை, அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமராக நியமித்தார்.

இந்த நிலையில்தான், அமைச்சரவை நேற்று அறிவிக்கப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது அரசியலில் விமர்சனத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. மேலும், சிக்கன பட்ஜெட்டை அடுத்த வருடம் தாக்கல் செய்வதற்கு பிளவுப்பட்ட பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற கடினமான பணியை செபஸ்டியன் லெகோர்னு எதிர்கொண்டார். இந்த நிலையில்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரான்சின் பொதுக்கடன் தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. ஜடிபியில் கடன் விகிதம் கிரீஸ், இத்தாலிக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றத்தில் பிரான்சில்தான் மோசமான நிலையை எட்டியுள்ளது.

முந்தைய அரசாங்கங்கள் கடந்த மூன்று ஆண்டு பட்ஜெட்டுகளை வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றின. இது அரசியலமைப்பால் அனுமதிக்கப்பட்ட ஒரு முறையாகும். இருந்த போதிலும், எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

செபஸ்டியன் லெகோர்னு, பட்ஜெட் மசோதா தாக்கல் செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment