TamilsGuide

கந்தானையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களின் ஆய்வறிக்கை விரைவில் வெளியிடப்படும்

கந்தானையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள், ஐஸ் அல்லது மெத்தம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், அவை தொடர்பான ஆய்வறிக்கையை இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், கைப்பற்றப்பட்ட இரசாயனப் பொருட்களின் ஆய்வக சோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது

இதேவேளை மித்தெனிய மற்றும் தங்காலையில் உள்ள நெடோல்பிட்டிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை, ஐஸ் எனக் கூறப்படும் மெத்தம்பெட்டமைன் எனத் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை உறுதிப்படுத்தியதுடன் வெலிகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் எனவும் அச்சபை கூறியுள்ளது.
 

Leave a comment

Comment