TamilsGuide

யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து ஐஸ், ஹெரோயின் போதைப்பொருள் உட்பட போதைமாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்ததன் ஊடாக பெறப்பட்ட 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்து சோதனையிட்டபோது, குறித்த நபரிடம் இருந்து 08 கிராம் ஹெரோயின், 16 கிராம் ஐஸ் போதைப்பொருள், 120 போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றுடன், போதைப்பொருள் விற்றதன்மூலம் ஈட்டப்பட்ட பணமான 2 இலட்சத்து 70ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment