TamilsGuide

யாழ்.தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரையை அகற்ற கோரி போராட்டம்

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி இன்று(06) இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ ரஜமகா விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நேற்று(05) முதல் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த விகாரையை அங்கிருந்து அகற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றும் போராட்டம் இடம்பெறுகிறது.
 

Leave a comment

Comment