TamilsGuide

அவுஸ்திரேலிய பிரதமருக்கு கொலை மிரட்டல் 

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுக்கு சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிஸ்பேனின் மோர்டன் விரிகுடாவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸ் அதிகாரிகள் நேற்று(4) காலை செயல்படுத்திய தேடுதல் பிடியாணையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

அல்பானீஸுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்க Carriage சேவையைப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சந்தேக நபர் பிரிஸ்பேன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றத்திற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment