TamilsGuide

சூரியின் மண்டாடி படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்து

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் `மண்டாடி' இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

மண்டாடி என்பவர் நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தில் சூரி முத்துகாளி என்ற மீனவனாக நடித்துள்ளார். நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.

படத்தின் சத்யராஜ், சாச்சனா, அச்யுத் குமார், ரவிந்தர விஜய், சுகாஸ் நடிகின்றனர். இப்படம் கடலில் நடக்கும் படகு விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி கடற்கரைப் பகுதியில் 'மண்டாடி' படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்று, படத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கேமராக்கள் மற்றும் பிற முக்கிய உபகரணங்களுடன் ஒரு படகில் கடலுக்குள் சென்றனர்.

இருப்பினும், அவர்கள் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தபோது, படகு எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படகில் இருந்த இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர். தகவல் அறிந்த படக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் உடனடியாக அவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.

இருப்பினும், இந்த சம்பவத்தில், சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான உபகரணங்கள் கடலில் மூழ்கியது. 
 

Leave a comment

Comment