TamilsGuide

45 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

பல இலட்சம் பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முற்பட்ட ஒருவர் , கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வௌிநாட்டு சிகரட்டுக்களின் பெறுமதி சுமார் 45 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர் இன்று (5) அதிகாலை 05.25 மணிக்கு ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் UL-226 என்ற விமானத்தின் ஊடாக டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த நிலையில்
முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 30,000 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் புத்தளம், கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment