TamilsGuide

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி

வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர்சங்கத்தினரால் இன்று (05) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்க பகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்ததுடன் அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுபோதினி அறிக்கையின் நிலுவை சம்பளத்தை வழங்கு, தரமான கல்விக்கு வளங்களை சரியாக பகிர்ந்தளி, கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்து, பயங்கவராத தடைச்சட்டத்தை ஒழி, அதிபர் ஆசிரியர்களை வீதியில் நிறுத்தாதே போன்ற கோசங்களை முன்வைத்திருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
 

Leave a comment

Comment