TamilsGuide

இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் தமிழகத்தில் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக இராமநாதபுரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை தமிழக கியூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இந்திய மதிப்பில் சுமார் 10 இலட்சம் ரூபாய் மதிப்புடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

இராமநாதபுரம் சக்கரக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு (04) அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நகராட்சி குப்பை கிடங்கு அருகே குடோன் அமைத்து அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதப்படுத்தி வந்துள்ளமை கண்டறியப்பட்டது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் ஒரு சந்தேகநபர் கைது செய்பட்டுள்ளதுடன் ஏனைய மூவர் தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் குறித்த கடல் அட்டைகள் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தவிருத்தமை தெரியவந்துள்ளது.

இதை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை
கியூ பிரிவு பொலிஸார் இராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
 

Leave a comment

Comment