TamilsGuide

ஹட்டனில் பாடசாலை மைதானத்தில் சுற்றித் திரியும் நரிகள் - அச்சத்தில் மாணவர்கள்

ஹட்டன் ஹைலண்ட்ஸ் ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள இலுக் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் நரிகள், காலையில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வந்து ஊளையிடுவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் விளையாடக்கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  எனவே இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment