கடந்த செப்டம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது.
இது 2018 ஆம் ஆண்டின் பதிவான சாதனையை முறியடித்தது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) கூற்றுப்படி, 2025 செப்டம்பரில் இலங்கை மொத்தம் 158,971 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது.
இது 2018 ஆம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகளின் வருகையான 149,087ஐ விட அதிகமாகும்.
SLTDA தரவு மேலும் செப்டம்பர் 2024 உடன் ஒப்பிடும்போது 30.2 சதவீதம் அதிகரிப்பைக் காட்டுகிறது.
அந்த நேரத்தில் 122,140 வருகைகள் பதிவாகின.
கடந்த செப்டம்பரில், இந்தியாவிலிருந்து 49,697 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து இங்கிலாந்து (10,752), சீனா (10,527), ஜெர்மனி (9,344) மற்றும் அவுஸ்திரேலியா (9,105) ஆகிய நாடுகளிலிருந்து அதிகளாவன சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 1,725,494 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது.


