இதன்போது, மாவட்டத்திற்குள் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது எழும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கடற்றொழல், நீரியில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கும் யாழ்.மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனான
விசேட கலந்துரையாடலொன்று இன்று (02) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வர்த்தக, வணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் பங்கெடுத்திருந்தார்.
இதன்போது, மாவட்டத்திற்குள் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது எழும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அவற்றிற்கான நடைமுறைசார் தீர்வுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன், அரிசி சந்தை நிலைமை குறித்தும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
அரிசி சந்தையை நிலைநிறுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பற்றிய விளக்கமும் அமைச்சர்களால் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
அத்தோடு, யாழ்ப்பாணப் பகுதியில் புதிய சந்தை வாய்ப்புகள் மற்றும் தேவையான வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற றுப்பினர்களான க.இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன், மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.


