TamilsGuide

சிம்பன்சிகள் குறித்த ஆய்வுக்குப் பெயர் பெற்ற ஜேன் குடால் காலமானார்

சிம்பன்சிகள் குறித்த உலகின் முன்னணி நிபுணரான பாதுகாப்பு ஆர்வலர் டேம் ஜேன் குடால் (Dame Jane Goodall) 91 ஆவது வயதில் காலமானார்.

குடாலின் மறைவு தொடர்பான செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவரது நிறுவனம், புதன்கிழமை (01) காலை லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சுற்றப் பயணத்தில் பங்கெடுத்த வேளையில், அவர் தூக்கத்தில் அமைதியாக இறந்ததாகக் கூறியது.

அத்துடன், குடாலின் ஆய்வுகள் “அறிவியலில் புரட்சியை ஏற்படுத்தின” என்றும், அவர் “நமது இயற்கை உலகின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பிற்காக அயராது பாடுபட்டார்” என்றும் அது கூறியது.

ஐக்கிய நாடுகள் சபையும் குடால்லின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து.

“நமது கிரகத்திற்கும் அதன் அனைத்து மக்களுக்கும் அயராது உழைத்து, மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் ஒரு அசாதாரண மரபை விட்டுச் சென்றுள்ளார்” என்று அது கூறியது.

1934 ஆம் ஆண்டு பிறந்து லண்டனில் வளர்ந்த குடால், தி ஸ்டோரி ஆஃப் டாக்டர் டூலிட்டில் மற்றும் டார்சன் போன்ற புத்தகங்களைப் படித்த பின்னர் விலங்குகள் மீது தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாக முன்பு கூறியுள்ளார்.

1977 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அவரது ஜேன் குடால் நிறுவனம், சிம்பன்சிகளைப் பாதுகாப்பதற்காகவும், விலங்குகள், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை ஆதரிப்பதற்காகவும் செயல்படுகிறது.
 

Leave a comment

Comment