TamilsGuide

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் - செர்னோபில் அணுமின் நிலையத்தில் அவசர நிலை அறிவிப்பு 

ரஷ்ய தாக்குதலை தொடர்ந்து உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் மீது ரஷ்யா திடீர் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.

இதையடுத்து செர்னோபில் அணுமின் நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கீவ் பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஸ்லாவுடிச்(Slavutych) நகரம் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளது.

1986ம் ஆண்டு நடைபெற்ற பேரழிவு நடந்த இடத்தில் நடந்துள்ள இந்த சமீபத்தில் ஏவுகணை தாக்குதலில் சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த நிலைமையை உக்ரைன் எரிசக்தி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment