TamilsGuide

15 வருடத்தை எட்டியுள்ள ரஜினியின் எந்திரன் திரைப்படம்... 

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி மக்களை வியக்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர்.

அவர் நடிகர் ரஜினியுடன் கூட்டணி அமைத்து இயக்கிய படங்கள் அனைத்துமே செம சூப்பர் டூப்பர் ஹிட். அப்படி ஷங்கர்-ரஜினி கூட்டணியில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் எந்திரன்.

ரஜினிக்கு நாயகியாக உலக அழகியாக இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார், படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தார்கள். ரோபோவை ஒரு கதாபாத்திரமாக வைத்து வெளிவந்த இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது.

ரூ. 130 முதல் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 320 கோடி வசூல் சாதனை செய்திருந்தது. ரூ. 300 கோடி கலெக்ஷனை தாண்டிய முதல் திரைப்படம் எந்திரன் என்ற பெருமையையும் பெற்றது.

இப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை தொடர்ந்து மக்கள் படம் குறித்து நிறைய பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a comment

Comment