நடிகர் மம்மூட்டி உடல்நிலைக் காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதனால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி மீண்டும் படப்பிடிப்பிற்காகத் திரும்பி உள்ளார். நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதாராபாத் புறப்பட்டு சென்றார்.
இதனை தொடர்ந்து நடிகர் மம்மூட்டி தனது ஃபேஸ்புக் பதிவில், "சிறிய இடைவெளிக்குப் பிறகு, நான் என் வாழ்க்கையில் மிகவும் விரும்பியதைச் செய்யத் திரும்பியுள்ளேன். கேமரா அழைக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு MMMN என்று தெரிவித்துள்ள படக்குழு டீசர் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, மகேஷ் நாராயணன் ஆகியோரின் பெயரின் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தைக் கொண்டு படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மம்மூட்டி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


